தினம் ஒரு பாட்டு இயற்கை - 34 = 210
அமைதி இரவினிலே வங்க கரையினிலே
ஆலோலம் பாடும் ஆரவார அலைகளே..!
அங்கும் இங்கும் அலைந்தாடும் நண்டுகளின்
ஆழ் துளைகளை தூர்த்தோடும் நீர்குமிழிகளே..!
மீன்களின் தாய்வீடு கடலன்னை தாங்க
மனிதரின் புனிதநீர் கடல் நீர் தாங்க
கப்பலுக்கு ரோடு கடல்மேல் தாங்க
கவிஞருக்கு போதிமரம் கடற்கரை தாங்க
ஆகாயபிம்பம் கடல்மேல் விழுக
அதனால் கடல்நீர் நீல நிறமாக
அந்த காட்சி கடலைவிட்டு அகல
ஆகுமே காலம் யுகம் யுகமாக
மூன்று திசையில் கடலை வளைத்து
மேற்கு திசையில் மலையை வைத்து
இயற்கை அன்னை உலகை படைத்து
இயக்கி வருகிறாள் எதையும் பொறுத்து
உணவுக்கு உப்பை தருவது கடல்
உலகம் - குப்பை கலப்பது கடல்
உண்பதற்கு மீனை தருவது கடல்
உலகம் - நன்மை அடைவது கடல்
காதலுக்கு ஜாகை தருவது கடல்
கற்பனை மதகை திறப்பது கடல்
கண்ணுக்கு போதை தருவது கடல்
கன்னித் தீவினை கொண்டது கடல்
ஆதி கடல் கொண்ட நாடு -
அதற்கு தனுஷ்கோடின்னு பேரு
பாதி கடல் கொண்ட நாடு
அதற்கு பூம்புகார்ன்னு பேரு
ஸ்ரீலங்க கடல் புலித்தலைவன் விரும்பிய நாடு
அவன் வீரத்துக்கு நிகர் யாரு கூறு.?
செங்கடல் செங்கீஸ்க்கான் கூட
நிராகரிக்க மாட்டான் தமிழீழ வரலாறு !