ஆண்டவனை நொந்தேன்

சோதனைகள் போதுமெனச் சொக்கனிடம் சொன்னேன்
***சோதித்துப் பார்ப்பதற்கோ துயரெனக்குத் தந்தான் ?
வேதனைக்குத் தீர்வுசொல்ல வேலனிடம் கேட்டேன்
***விளையாட்டாய்க் கருதினனோ வேடுவனும் மறந்தான் ?
பாதமலர் அடிபணிந்து பரமனிடம் பகர்ந்தேன்
***பற்றின்றி வாழ்வதற்கோ பயிற்சியென வதைத்தான் ?
ஆதலினால் மனம்வெதும்பி அமைதியின்றித் தவித்தேன்
***ஆனமட்டும் நம்பியதால் ஆண்டவனை நொந்தேன் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Sep-16, 10:54 pm)
பார்வை : 55

மேலே