பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிள்ளையாரே

ஆனை முகத்தனே.....
ஐந்து கரத்தனே.....
வாரணமே.....
பூரணமே.....

வினை தீர்த்திடும்
விநாயகனே.....

பிறவிப்பயன் தரும்
பிள்ளையாரே.....

பிள்ளையார் சுழி போட்டே
தொடங்குவோம் செயலை...
முழு முதற் கடவுளே.....

அரச மரத்தடி வீற்று
உலகை காக்கும்
எங்கள் அரசனே.....
ஆருயிரே.....

உலகை காக்கும் எங்கள்
உலகளந்தானின்
மருமகனே.....

பரம்பொருளான
எங்கள் பரமனின்
நடுவனின் மைந்தனே.....

வீரத் தமிழன்
எங்கள் குறிஞ்சி நிலத் தலைவனின்
உடன் பிறப்பே.....

மாங்கனியில்
உலக தத்துவம் தந்தவரே.....

எலி உன் வாகனமே.....
எதுவும் உன் லீலையையே.....

ஓடும் நதியின்
வெள்ளை உள்ளமே.....
பரந்து விரிந்த பசுமை தாயகமே.....
அலை கடலே.....
ஓய்வெடுக்கும் கரையே....

மரமே....
மரம் தரும் நிழலே....

உலகமே
மாயையே
உயிர்களின் இயக்கமே
உயிர்களே நீதானே

அகமே.....
அகத்தின் அன்பே.....

அல்லும் பகலும் நீயே.....
விழியும் பார்வையும் நீயே.....
ஏக்கமும் எண்ணமும் நீயே.....
தவிப்பும் துடிப்பும் நீயே.....
(தவிக்க விடுகிறாய்
துடிக்க விடுகிறாய் )
தேடலும் முடிவும் நீயே.....
முடிவில் தொடக்கமும் நீயே.....

பூவும் நீயே.....
பூவின் வாசமும் நீயே.....
பூவில் வண்டும் நீயே.....
வண்டு முகரும் பூவின் தேனும் நீயே.....

வாடிய பூவின் கண்ணீரும் நீயே.....
கண்ணீரை துடைத்திடும் கைகளும் நீயே.....
வாடிய பூவில் உதிரும் இரக்கமும் நீயே.....
பூவில் உருவாகும் சருகும் நீயே....
சருகில் மலரும் உரமும் நீயே.....
உரத்தில் செழிக்கும் மண்ணும் நீயே.....
மண்ணை ஆளும் பொன்னும் நீயே.....
மண்ணை தவழும் மழையும் நீயே.....
மழையை பொழியும் வானும் நீயே.....
வானில் வாழும் யாவும் நீயே.....
பூமியில் உலவும் யாவும் நீயே.....

அணுவுக்குள் உலகை வைத்தவன் நீயே....
அணுவும் நீயே....
ஒன்றும் நீயே.....
பலவும் நீயே......
இன்றும் நீயே.....
நேற்றும் நீயே.....
நாளையும் நீயே.....

எளிமையும் நீயே....
அதிசயமும் நீயே.....

நெஞ்சுக்குள் வழியும்
ஆழி அன்பும்
அதை தந்த உயிரும்
உணர்வும்
மொழியும்
தந்த இறைவா..........

நின்னை அடைய தவிக்கின்றேன்......
என்னை நீ ஏற்றுக்கொள் உன் மலரடியில் இறைவா.....

உமக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தோழா (இறைவா)....
🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂💐💐💐💐💐💐💐💐💐☺☺☺☺☺☺☺☺☺👑👑👑👑👑👑👑👑👑🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌾🌾🌾🌿🌿🌿🍁🍁🍁🍁🍁

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-Sep-16, 7:20 am)
பார்வை : 154

மேலே