இரக்கமில்லா மனிதர்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒய்யாரமாய் ஒதுங்கி நின்று வரவேற்று
தினமும் ஆனந்த பூச்சொறிவாயே!
இன்று என்ன மறியல் போராட்டம் நடத்துகிறாயாமே!
மோகம் கொண்டு தாகம் தீர்க்க
உன் காதலியை கட்டியணைக்க நினைத்து
மரணத்தை தழுவிக்கொண்டாயா?
இல்லை மழையும், புயலும்
உன்னை மரண படுக்கையில் தள்ளிவிட்டதா?
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பார்களே அது இதுதானா?
ஒருவேளை நன்றியில்லா மானிடர்களிடையே
வாழ்வது சாபம் என்று மடிந்து போக துணிந்தாயா?
எதுவாயினும் என்ன..
என்னை சுவாசிக்க வைத்தது நீயல்லவா!
உனக்கு இரங்கல் தெரிவிப்பதிலென்ன பாவம்?
இழுத்தெறிந்துவிட்டு செல்கிறார்கள்
"இரக்கமில்லா மனிதர்கள்"