மழைத்துளிகள்
கும்மிருட்டு
கர்ப்பிணி பெண்
அவள் கதறுகிறாள்
ஜீவித்தது பல உயிர்கள்
மழைத்துளிகள் ....
ஒவ்வொரு
குழந்தையும்
புனிதமாய்
பூமி மீது விழுந்தன ....
சிப்பிக்குள்
விழுந்த குழந்தை
முத்து என்று
பெயர் சூட்டினர் ....
இயற்கை மீது
விழுந்த குழந்தைகள்
பூக்கள்
காய்கள்
கனிகள்
பெயர் சூட்டினர் ....
மலை மீது
விழுந்த குழந்தை
நீர் விழ்ச்சி
என பெயர் சூட்டினர் ....
மண் மீது
விழுந்த குழந்தை
கானல்
என பெயர் சூட்டினர் ...
விவசாய நிலம் மீது
விழுந்த குழந்தை
நெல் மணி என
பெயர் சூட்டினர் ....
அவள் பெற்ற
குழந்தைகள்
ஒட்டு மொத்த
உலகத்தை ஆண்டு
கொண்டிருக்கின்றனர் ......