தாலாட்டுப் பாடுகிறேன்

தாலாட்டு நான் பாடுகிறேன்
தாயானேன் என் தங்கைக்கும் !
தாய் தந்தை எமக்கில்லை
தரணியில் உறவுகள் இல்லை !
வாழ்ந்திட ஓர் இடமுமில்லை
வழிகாட்டிட எவரும் இல்லை !
மரத்தடியே எங்கள் குடிலானது
மண்வெளியே சொந்த இடமானது !
உதவிகள் செய்வார் யாருமில்லை
உண்மை காரணம் தெரியவில்லை !
இரக்கம் உள்ளோர் இங்கில்லை
இதுதானா உலகம் புரியவில்லை !
அனாதைகள் என்ற பெயருடனே
அல்லலில் சிக்கித் தவிக்கின்றனர்
அகிலத்தில் பலரை பார்க்கின்றேன்
அவர்களை எண்ணி அழுகின்றேன் !
பழனி குமார்