அச்சம் தவிர்

நீயே வெறுத்தாலும்
உன்னை உடைத்து சுக்குநூறாக்கும் வலிகளை
பூச்செண்டு கொடுத்து
பெற்றுக்கொள் ...

புடம் போடாத தங்கம்
பூரணமாவதில்லை
சூரியன் சுடாமல்
சூனியம் விலகுவதில்லை

வலிகள் வாங்கி
வாள் செய்!
எங்கும் ஓடிவிடாது
நீ கொண்டாட நினைக்கும்
வாழ்க்கை!

எழுதியவர் : தென்றல் ராம்குமார் (3-Sep-16, 9:43 am)
Tanglish : achcham TAVIR
பார்வை : 85

மேலே