பயணப்படு ~ சகா

ஓடு...

உனக்கான
பாதையின் ஆரம்பம்
நோக்கி ஓடு...!

ஆரம்பித்தால்
உன் பயணமே
உனை துரத்தும்...!!

விக்கலில்லா தேகமும்
சிக்கலில்லா பாதையும்
எங்கிருக்கிறது?

வேகத்தில் விவேகத்தை
வேட்டியாய்
அணிந்துகொள்...!!!

இலக்கு நோக்கிய
பயணத்தில்,

தேகம் சுருங்கலாம்,
வேகம் குறையலாம்,
மனம் மட்டும்
நாடிய தேடலில்...!

அர்த்தமுள்ள
இலக்கா?

ஆன்மீகத்
தேடலா?

முற்போக்கு
சிந்தனையா?

முரண்பட்ட
ஆசையா?

எதுவும் உனைத் தொடலாம்...

பயணப்படு...பயப்படாமல்
உன்
பந்தயப்பாதையின்
ஆரம்பம் நோக்கி...!!!

எழுதியவர் : சகா (சலீம் கான்) (3-Sep-16, 12:12 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 155

மேலே