மனிதம்

மனிதம்
========
மிகவும் தன்னம்பிக்கை கொண்ட மனிதர்...
இலவசத்தின் பிம்பத்தை
இலகுவாய் சொல்லிவிட்டார்...
அதிலும் மனிதனை
ஏமாற்றக் கூடாது என்று
நினைக்கும்
உயர்ந்த உள்ளம்...
இந்த தன்னம்பிக்கை
மனிதரின் ஆசைகள் நிறைவேறட்டும்...
ஊனம் ஊனம்
ஊனம் இங்கே
ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லைங்கோ...
தன்னம்பிக்கை தமிழா...
தரணி ஆள வா...
இங்கே இருப்பவர்கள்
சிலர் மனது
சின்ன மனது
சிலர் மனதோ
ஊனமுடையது
ஆனால் உன் மனதோ
மிகப்பெரியது...
உயர்ந்தது...
எதிர் நீச்சல்
போட்டாலும்
முகம் மலர்ச்சி குறையவில்லை
உன்னில் வேகம்
குறையவில்லை...
உன் தைரியம்
அந்த கடலை விட பெரியது...
உன்னை போல் மனிதன் யாவரும் வாழ்ந்திட வேண்டும்...
அழகாய் சொல்லிவீட்டீர்கள்
கணேசன் ஐயா...
உலகத்தை இயக்குவது
மனிதம் என்று...
ஆம் மனிதம் தான்...
மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது...
ஆனால் தீமைகளுக்கு இடையில் இருப்பதால் எளிதில்
அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை...
வாழ்த்துக்கள் ஐயா...
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து