ஏனமேந்தும் வாழ்வு
![](https://eluthu.com/images/loading.gif)
தமிழ்
=====
எங்கே எங்கள் எக்களிப்பு எச்சிலை தருவது
# (எ-1-3 = பொழிப்பு மோனை )
(நிரை+நிரை=கருவிளம்)(5)
ஏதோ இறையோ ஏனோ
விழியை இழந்தது
# (ஏ-1-3)
(நிரை+நிரை=கருவிளம்)(5)
எதிர்பார்ப்புகள் எத்தனிக்கும் எடுத்தெறியும் காலம்
வலிக்கும்
# (எ-1-3)
(நிரை+நேர்=புளிமா)(5)
ஏற்றம் மாற்றம்
ஏமாற்றமாகி
சறுக்கிடும் வாழ்வில்
# (ஏ-1-3)
(நேர்+நேர்=தேமா)(5)
*****
எழில் இழந்து எய்த்தலாகி
எச்சமாவேனோ
எச்சனே
# (எ-1-3)
(நேர்+நிரை=கூவிளம்)(5)
*எய்த்தல்=இளைத்தல்
*எச்சன்=அக்கினி
ஏழையை ஏணியும்
ஏளனமாய் பார்த்து சிரிக்குது
# (ஏ-1-3)
(நிரை+நிரை=கருவிளம்)
(5)
எழுதும் கவிதை என் பெயரை சொல்லுமோ
# (எ-1-3)
(நேர்+நிரை= கூவிளம்)(5)
ஏன் எனை ஏன் நடுத்தெருவில் விட்டாய்
# (ஏ-1-3)
(நேர்+நேர்= தேமா)(5)
*****
எல்லோனே எதற்கு எமக்கு இந்த பாத்திரம்
# (எ-1-3)
(நேர்+நிரை=கூவிளம்)(5)
* எல்லோன்=சூரியன்
ஏகாசம் இல்லை
ஏக்கம் உண்டு
நெஞ்சில்
# (ஏ-1-3)
(நேர்+நேர்=தேமா)(5)
* ஏகாசம் = மேலாடை
எங்ஙனம் யாசிக்க எந்திரமாய் போவேன்
எகினனே
# (எ-1-3)
(நிரை+நிரை=கருவிளம்)
(5)
* எகினன்= பிரம்மன்
ஏடுகோளாளன் எமனாவது ஏமாளிக்கு ஏடு தருவாய்
# (ஏ-1-3)
(நிரை+நேர்=புளிமா)(5)
* ஏடுகோளாளன் = கணக்கன்
*****
என்பு தேய எறும்பாய் எப்பொழுதும்
ஓடினாலும்=முயன்றும்
# (எ-1-3)
(நிரை+நேர்=புளிமா)
(5)
* என்பு = எலும்பு
ஏனத்தின் கையில்
ஏந்துகிறேன்
கண்ணீரை
மருந்தாக
# (ஏ-1-3)
(நிரை+நிரை=கருவிளம்)
(5)
எத்தன் சத்தமின்றி
என்னையும் ஏமாற்றிடுவான்
தட்டில்
# (எ-1-3)
(நேர்+நேர் =தேமா)(5)
* எத்தன் = ஏமாற்றுவோன்
ஏகியனும்
எல்லோரைப்போலவே
ஏகதமனாய் நின்று
பார்க்கிறான்
# (ஏ-1-3)
(நேர்+நிரை=கூவிளம்) (5)
* ஏகியன் = தோழன்
* ஏகதமன் = பலருள் ஒருவன்
*****
எல்லாம் காலத்தின் எதிர்மறையா
விழியின் துளியா
# (எ-1-3)
(நிரை+நேர்=புளிமா)(5)
ஏடேடுத்து படிக்காததால்
ஏந்துகிறேனோ பிச்சையின் அடையாளம் = யாக்கை
# (ஏ-1-3)
(நேர்+நேர்=தேமா)
(5)
எப்பொழுது வேண்டுமானாலும்
எதுவும் மாறும் உலகில்
# (எ-1-3)
(நிரை+நேர்=புளிமா)(5)
ஏறுமாறு வேண்டாம்
ஏழையிவன் வாழ்க்கையே உதாரணம்
# (ஏ-1-3)
(நிரை+நிரை= கருவிளம்) (5)
* ஏறுமாறு = தாறுமாறு
*****
என் தாய் தமிழுக்கு
என் எல்லா தமிழ் ஐயா
தமிழ் அம்மாவிற்கும் சமர்பிக்கிறேன்
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து