புதுமைப் பெண்

பெண்
=======
மாதவராய் பிறப்பதற்கே
நல்ல மா தவம்
செய்திட வேண்டுமம்மா
என்றார்
முண்டாசு கவி...
வீட்டிற்குள்ளே
பெண்ணை பூட்டி வைப்போம்
என்ற விந்தை மனிதன்
தலை கவிழ்ந்தான்
ஆம் தலை கவிழ்ந்தான்
எங்கள் கவிஞன்
தொலை நோக்கு பார்வை கொண்டவன்
நாளை என்ன நடக்கப் போகிறது என்று
இன்றே பாரினில் பாட்டினில் வைத்தான்...
இன்று மட்டும்
பாரதி இப்பிரபஞ்சத்தில்
இருந்தால்
"நான் எதிர்பார்த்த
புதுமைப் பெண்கள்
மண்ணில் அவதரித்து விட்டார்கள் "
என்று பெருமை பட்டுக் கொள்வார்...
**(())**
எத்தனை புதுமைப் பெண்கள் பிறந்தாலும்
மீண்டும் ஒரேயொரு பாரதி கூட பிறக்கவில்லையே...
குறிப்பு:
இன்னும் எத்தனை எத்தனையோ பெண்கள்...
புகைப்படம் என்னிடம் இல்லை...
பெண்ணே
உன்னிடம் உள்ள திறமை போல்
புகைப்படமும் எங்கோ வீற்றிருக்கிறது
நாளை வெளிப்படும்
நம்பிக்கை எனக்கு இருக்கிறது
உனக்கு இருக்கிறதா?
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து