யாதும் சூது

"இன்னைக்கு வரைக்கும் இந்த நிகழ்ச்சி எத்தனையோ பேரோட வாழ்க்கைல வர்ற இன்னல்களுக்கு தீர்வு தந்துருக்கு இன்னைக்கு நம்ம 50 ஆவது எபிசோடில் பார்க்க போறதும் அப்படி ஓரு கேஸ் தான் ,நம்ம இப்போ நிகழ்ச்சிக்கு போகலாமா" என்று அவன் முகத்தை உற்று நோக்கினாள் அவள்.சில நேரம் மௌனித்த பின் ஆம் என்பது போல தலை அசைத்தான் அவன்."சொல்லுங்க உங்க வாழ்க்கை எங்க தொடங்கி எப்படி பயணம் ஆச்சு?....நீங்க இப்படி ஆனதுக்கு என்ன காரணம்?".அதற்கும் மௌனத்தை மட்டுமே அவன் பதிலாக அளித்தான்.அப்போது அம்மௌனத்தை கலைத்தது அந்த ஒளிப்பதிவாளரின் குரல் "ஏம்மா கேமரா ரோலிங் ஆகிட்டு இருக்கு அவனை ஏதாவது பேச சொல்லுமா"."ஹலோ உங்கள தான்.........." என்று அவளிடம் இருந்து சட்டென்று வந்த கோபம் அவன் மௌனத்தைக் கலைத்தது."ம்ம் மேடம் என்ன பற்றி நான் சொல்றதுக்கு முன்னாடி உங்கள்ள பற்றி நீங்க சொல்லலாமே"."சார் கட் கட் டைரக்டர் சார் என்னது இது இந்த ஆளு என்னென்னமோ பேசிகிட்டு இருக்கான் ஒரு செலிபிரிட்டி கிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியல,நீங்க சொல்லித்தந்ததை தான நான் பேசுறேன்" என்று முறையிட்டாள் அவள்."இங்க பாருங்க கொஞ்சம் கோப்ரேட் பண்ணுங்க சார் சொதப்பாதிங்க நாங்க இத வேலை மெனக்கிட்டு எடுக்கல,இது மட்டும் இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு பிடிக்கல நான் செத்தேன் புரிஞ்சுக்கோங்க...................ஓகே ஓகே டேக் 2 ஆக்சென்" என்றார் அவர்."சொல்லுங்க உங்க வாழ்க்கை எங்க தொடங்கி எப்படி பயணம் ஆச்சு?....நீங்க இப்படி ஆனதுக்கு என்ன காரணம்?" என்று ஓப்பித்தாள் அவள்."இல்ல மேடம் என் வாழ்க்கை எனக்கு பிடிக்கல என் உலகம் ரொம்ப சின்னதா இருக்கு ஒரு வலையத்துக்குள்ள மாட்டின எறும்பு மாறி எனக்கு தெரிஞ்ச இடம்னா ஒன்னு என் வீடு,ஸ்கூல் அப்பறோம் அந்த மனநல மருத்துவமனை"."மருத்துவமனையானு....?" கேட்ட அவளின் வயிற்றில் மறைத்து வைத்திருந்த ஓரடி நீளமுள்ள கத்தியை புதைத்துவிட்டு மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்தான் அவன்."சார் நம்ம ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வந்தாச்சு.....ஷூட்டிங் ஆரமிச்சுரலாமா?" என்று அந்த டைரக்டரிடம் கேட்ட அவர் அஸ்சிஸ்டன்டிடம் "ஷூட்டிங் முடிஞ்சிருச்சு..." என்றார் அவர்.

எழுதியவர் : ரேவந்த் அருணாச்சலம் (4-Sep-16, 12:24 pm)
Tanglish : yaadhum soothu
பார்வை : 229

மேலே