ஆசி

ஆசி

உன் இறுதிவரை உனக்கு கிடைத்திடுமே
உன் அன்னையவள் வழங்கிடும் ஆசியதுவும்
நீ செய்திடும் பாவங்களனைத்தும்
ஒரு நொடியில் விலகி சென்றிடுமே
உன் தாயவள் வழங்கிடும் ஆசியிலே....

உன் வாழ்க்கை சிறப்பாய் அமைந்திடவே
உன் தந்தையவரும் வழங்கிடுவாரே இனிய ஆசியதுவும்
கண்டிப்பும் கனிவும் நிறைந்தே உனக்கு
உன் வாழ்வில் சிறந்த தலைவனாய் நீயும் திகழ்ந்திடவே
உன் ஆசான் வழங்கிடுவாரே நல் ஆசியதுவும்....

பதினாறும் பெற்று பெரு வாழ்வு நீயும்
வாழ்ந்திடவே உன் தாத்தா பாட்டியும்
உனக்கு வழங்கிடுவார்களே சிறந்த ஆசியதுவும்
பெரியோர்களால் கிடைத்திடுமே பெரு ஆசியதுவும்
உன் நண்பர்களால் கிடைத்திடுமே நல் ஆசியதுவும்....

உனை துயரங்கள் சூழ்ந்திடும் வேளையிலே
உன் கண்ணீர் அதுவும் துடைத்திடவே
இறைவன் உனக்கு வழங்கிடுவாரே இறை ஆசியதுவும்
உற்றாரால் கிடைத்திடுமே உற்ற ஆசியதுவும்
அயலாரால் கிடைத்திடுமே வாழ்த்து ஆசியதுவும்....

உன் கரம் கொண்டு உதவி நீ செய்கையிலும்
ஏழையின் வயிற்று பசியினை நீ தீர்க்கையிலும்
தானம் கேட்பவனுக்கு தயங்காது தானமளிக்கையிலும்
அவர்கள் தம் உள்ளத்திலிருந்து அளித்திடும் ஆசியதுவும்
உன் ஆயுளை தாண்டியும் நிலைத்திடுமே......!!

எழுதியவர் : அன்புடன் சகி (5-Sep-16, 4:27 pm)
Tanglish : aasi
பார்வை : 64

மேலே