கவிதை 122 மனிதற்கோர் சவாலாகும்

ஏழ்மையிலும் நேர்மை
வாழ்பவர்க்கோர் வழிகாட்டி
கோபத்திலும் பொறுமை
மனிதநேயத்தின் பரிமாணம்

தோல்வியிலும் விடாமுயற்சி
வெற்றிக்கோர் படிக்கட்டு
வறுமையிலும் உதவிசெய்யும்மனம்
வாழ்பவர்க்கோர் எடுத்துக்காட்டு

துன்பத்திலும் துணிவு
இன்பத்திற்கோர் வித்தாகும்
செல்வத்திலும் எளிமை
வாழ்பவர்க்கோர் உதாரணமாகும்

பதவியிலும் பணிவு
பொறுப்புக்கோர் அத்தாட்சி
வாழ்விலும் வெற்றி
மனிதற்கோர் சவாலாகும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (5-Sep-16, 8:10 pm)
பார்வை : 53

மேலே