பல விகற்ப இன்னிசை வெண்பா அபவமும் ஆண்டவ னை

இரு விகற்பக் குறள் வெண்பா ..

அபவமும் ஆண்டவ னைநினைத்தி ருப்பார்
அகிலத்தில் யாரு மிலை

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

அபவமும் ஆண்டவ னைநினைத்தி ருப்பார்
அகிலத்தில் யாருமிலை அன்பே அபவமும்
இங்கு உனையே நினைத்து நினைத்தேயென்
நெஞ்சில்யின் பம்பெருகு தே

அபவ(மு)ம் = 24x7


06-09-2016
===============

"அபவம்" என்றொருசொல் அகராதியில் உளதோ இலதோ அறியேன்.

"அபவம்" "இபவம்" என்று இரு சொற்கள் தமிழுக்கு நான் செய்யும் தொண்டு.

அபவம், இபவம் இவ்விருசொற்களின் பொருள் ஒன்றே.

சொற்கள் உருவாக்கிய விதம்.

அபவம்:
முதல் எழுத்து "அ" (அல் = இரவு, இருள்), "ப" (பகல் என்பதன் முதல் எழுத்து), "வம்" (வருடம்) என்பதன் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் ஆகும்.

அதுபோல, "இபவம்" ("இ" இரவு, "ப" பகல், வ"வம்" வருடம்)

இப்பொழுது நடைமுறையில் மிகவும் உபயோகத்தில் உள்ள ஒரு சொல், அதாவது 24x7 என்பதை எண்ணில் கூறுகிறோம். இதையே நாம் "அபவம்" "இபவம்" என்று கூறவேண்டும் என்பதே என் விருப்பம்.

எழுதியவர் : (6-Sep-16, 9:19 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 49

மேலே