மகிழ்ச்சியுரை

02.09.02 - நடந்த "புனிதர் அன்னை தெரசா" இசை வெளியீட்டு விழாவில் எனது மகிழ்ச்சியுரை இதோ இந்த தொகுப்பின் வடிவில் ...

நல்லதே நடக்கும்
நம்பிக்கை வைத்தால்
உள்ளதும் போகும்
உண்மையை மறைத்தால்..!

என்னை படைத்த இறைவனுக்கு என் மகிழ்ச்சி..!

இறைவன் அழைப்பை
இனிதே ஏற்று
இதயம் உவந்து
இல்லறம் துறந்து

தன்னலம் காவா
தந்தையர் குலமே
உலகம் போற்றும்
உன்னத பணிக்கு ... என் மகிழ்ச்சி

அறிவிற் சிறந்த
அறிஞர்கள் நடுவினில்
பளுகிப் பெருகும்
பன்முகக் கலைஞன்

முத்தாய் கிடைத்த
முத்தையா அவையினில்
அடியேனும் கலந்ததில்
அன்புறச் சொல்கிறேன் ..மகிழ்ச்சி ..!

அகமும் முகமும்
அழுகை மறக்கும்
மருந்தாய்ப் பதியும்
மனிதனின் வாழ்வில்

முடிவிலா இசையால்
முகவரி பதித்து
வளர்ந்தவர் இசைஞானி
வரிசையில் இன்று'யானி' ... மகிழ்ச்சி ..!

முயற்சியின் உருவம்
முழுமை அடைய
தொடர்பினைக் கொடுத்து
தொகுப்பென வகுத்து

படைப்பெனும் பந்தியில்
பங்கிட அழைத்தார்
வழங்கிடும் குணத்தால்
வள்ளல்-நம் தயாரிப்பாளர் .. மகிழ்ச்சி ...!

மனிதனின் நேயம்
மலர்ந்திடும் தருணம்
உணர்வுகள் எல்லாம்
உறவென மலரும்

அனைவரின் வரவு
அன்னையின் உயர்வு
அன்பே நமக்கென்றும்
அழியா வாழ்வு....மகிழ்ச்சி ..! நன்றி வணக்கம்...!

அன்புடன் ,
ஜாக் / Jack

எழுதியவர் : ஜாக் ஜெ ஜீ (6-Sep-16, 10:18 am)
பார்வை : 76

மேலே