தங்க கிணறு-பொறியியல் படிப்பு

அந்த கிணற்றில் தங்கம் உள்ளதாம்,
அன்று சொன்ன வரிகள், அழியா அதிசயம்,
சொன்ன சிலர் மேலேறி வந்து கட்டினார் வீடு,
சிலர் வாங்கினர் காரு, பின்பு டிவோர்ஸ்.
எந்த கிணற்றில் பூதம் இருக்குமோ என்று பயந்த பெற்றோர்,
தெருமுனை மாடி வீட்டிலிருந்து வெளிவந்து குற்ற உணர்வோடு,
பிள்ளையிடம் சொன்னனர்- இருக்காது என்று.
ஆகும் செலவை ஏற்று, பத்திரமாய் இறக்கி விட்டனர்.
இறக்கிவிட்ட ஏணி கானல் நீராக,
கைவிரித்து அழுது அழைக்கிறது -தூரத்து குழந்தை.

எழுதியவர் : பூபாலன் (6-Sep-16, 11:50 am)
பார்வை : 213

மேலே