விதவையின் மறுமணம்

ஏதோ குற்ற உணர்வு ,
களங்கமில்லா மறு இதயத்தில் பதியின் பதிவு,
இது நீடிக்குமா!
என் வானில் வானவில்லும் கானல் நீரென நினைத்தேன்,
வண்ணத்துப்பூச்சி உடை கொடுத்தாய்,
இருவர் தியாகத்தை உணர்ந்தேன், மகிழ்கிறேன்.
உயிரினும் மேலான பரிசை தேடுகிறேன்,
தேடி, தோற்று, சிறுத்து,
தலை கவிழும் தெரிவையின்- பரிசை
தலை நிமிர்த்தி காட்டியது உன் ஆள்காட்டி விரல்.

எழுதியவர் : பூபாலன் (6-Sep-16, 11:36 am)
பார்வை : 110

மேலே