மானுடம்

ஒவ்வொரு விடியலிலும்
சூரியனை பார்த்து
ஒரு வணக்கம்
ஒரு விண்ணப்பம் (அ ) வேண்டுகோள்...

இந்த நாளும்
இந்த பயணமும்
இனிதாய் இருக்க ஆசிர்வதிக்குமாறு ...

வாழ்வில்
பயணங்களும் மனிதர்களும்
வந்து செல்வதுண்டு..
ஒவோருவரும் விட்டுச்செல்லும்
வடுக்கள் மட்டும்
பசுமையும் பகைமையும் மனதோடு ...

புத்தனும் ஏசுவும்
அன்பை பகிரச்சொன்னர்கள் ...
ராமனும் கிருஷ்ணனும்
உறவுகளை உணர்த்தி சென்றார்கள்
நபிகள்
தானத்தை உணர்த்தி சென்றார் ...

ஆக அனைவரும் அறிந்திருந்தார்கள்
மனிதன் இன்னும்
மனிதனாக மாறவில்லை ...
இவர்களுக்கு மானுட பாடத்தின்
பதிப்புரை தந்தார்கள்

பதிப்புரை விளக்கத்தை
மொழியியல் செய்தார்கள்
மொழியியல் வைத்தே
அரசியல் செய்தார்கள்

அரசியல் என்பது
அரசை இயங்க செய்வது ...
அரசின் செங்கோல்
அறத்தை சார்ந்தே இருத்தல்....

அறம் என்பது
மொழியாழனின் கூற்றை சார்ந்ததே ...

இன்று மொழிப்போரின் வினையால்
மாசுபட்ட வர்ண்ணனை
மாறிப்போன அரசியல்...

வேறுபட்ட வீட்டுக்குள்
விருந்தாளி வந்தார்கள் ...
விதைத்து போன விதைகளெல்லாம்
மண்ணின் உறவறுக்கும் ...
ஒற்றர் படை

பிரிந்திருக்கும் மனிதர்களை
ஒன்றுசேர்க்க வந்தோம் என்றார்
பிரித்துவைக்கும் விதையை விற்று ....

வண்ணகள் கொண்ட தோட்டம் மக்கள்
இவர்களின் வசந்தங்களாய்
நாங்கள் உள்ளோம் என்கிறார்கள் ..

மானுடமே
இந்த வசந்தகள்
பூமியை சுழற்சியில் இருந்து
பிரித்துவைத்து மீண்டும்
தன் ஆளுமையால்
அவைகளை சுழல செய்வது

விஞ்ஞானம் என்பது
மானுடத்தை உணர முற்படுகிறது ..
ஏனெனில் மானுடம்
உணர்தலுக்கு அப்பாற்பட்டு உன்னதமானது ..

அதுபோல் மானுடம்
இறைவனை உணர முற்படுகிறது...
ஏனெனில் இறைவன்
மானுடத்தில் மகிழ்ந்தே இருக்கிறன்.....
-இவன் விநா

எழுதியவர் : விநா (6-Sep-16, 11:55 am)
Tanglish : maanudam
பார்வை : 74

மேலே