இவ்ளோ வெவரமா பேசுறே
POLICE : யோவ் உன் பேர் என்னயா?
CITIZEN : என் பேரு ராஜேஷ்'ங்க.
ஆதார் அட்டைல ருஜேஷ்'ங்க.
ரேசன் கார்டுல ரஜேஷ்.
ஸ்கூல் டீசியில ரோஜேஷ்.
டிரைவிங் லைசென்ஸ்ல ரிஜேஷ்'ங்க.
POLICE : யோவ், என்னயா பேர கேட்டா ஒளரிகிட்டு இருக்கே.
CITIZEN : சார், நான் ஒளரலைங்க. நம்ம நாட்ல அரசு ஆவணங்களில் நம்ம பெயரை இப்படித்தான் அவங்க இஷ்ட்டத்துக்கு எழுதி வைக்கிறாங்க.
POLICE : என்னயா இது? ஆதார் அட்டைல உன் போட்டோவே இல்ல.
CITIZEN : நல்லா உத்து பாருங்க சார், அதுல என் கண்ணு மட்டும் தெரியும். நம்ம டெக்னாலஜி அப்டி.
POLICE : உன் லைசென்ஸ்ல கையெழுத்த காணோம்?
CITIZEN : நல்லா பாருங்க சார், கை ரேகை மாதிரி ரெண்டு மூனு கோடு போகும்.
POLICE : ஆமா நீ எதுக்கு ஓவர் ஸ்பீடுல வந்தே?
CITIZEN : சார், நான் வச்சிருக்கிறது TVS EXCELL. இது 40 க்கு மேல போகாதுங்க.
POLICE : ரேஸன் கார்டுல உனக்கு வயசு 12னு போட்டிருக்கு? எப்டி நீ வண்டி ஓட்டலாம்?
CITIZEN : அய்யோ ஆபிசர், இது 10 வருஷத்துக்கு முன்னாடி தமிழக அரசு கொடுத்த ரேசன் கார்டு. இப்ப வரைக்கும் புது ரேசன் கார்டு தரவே இல்ல.இப்ப எனக்கு 22 வயசு சார்.
POLICE : ரோடு டேக்ஸ்லாம் ஒழுங்கா கட்டிருக்கியா?
CITIZEN : நம்ம ஊர்ல எங்க சார் இருக்கு ரோடு? நீங்க ரோட காட்டுங்க நாங்க டேக்ஸ கட்டுறோம்.
POLICE : இது சரிவராது. நீ கோர்ட்ல வந்து பேசிக்கோ.
CITIZEN : ஐயோ வேணாம் சார். வாய்தா வாய்தானு நாலு வருஷத்துக்கு இழுத்தடிச்சு அப்பரம் கேஸயே தள்ளுபடி பண்ணிருவாங்க. நீதி மன்றத்துல எப்ப சார் எங்கள மாதிரி ஆளுக்கு நீதி கிடச்சிருக்கு?
POLICE : இவ்ளோ வெவரமா பேசுறே, நீ என்ன படிச்சிருக்க?
CITIZEN : பாத்தீங்களா சார், நான் படிச்சவன்னால தான் தெளிவா கேக்குறேன்னு நீங்களே புரிஞ்சுக்கிட்டீங்க. படிச்சா வெவரம் வந்திரும்னு தெரிஞ்சு தான் சில அரசு பள்ளிகளை மூடிட்டு, மீதி இருக்கிற பள்ளிகளை கவணிக்காம வச்சிருக்காங்க.நாம முட்டாளா இருக்குற வரைக்கும் தான் அவங்க ஆட்சி செய்ய முடியும்.
POLICE : சரியா சொன்னே தம்பி.உன்ன மாதிரியே எல்லாரும் தெளிவா இருந்தா நாங்க ஏன் உங்கள தொல்ல பண்ண போறோம்.சரி தம்பி நீ கெழம்பு. பாத்து போ பா.
(இதுல பல விசயங்கள் அடங்கியிருக்கு)