சொல்ல துடிக்குது மனசு
உன் கடைப்பார்வை
கனமழையால் நனையும்போது தான்
உணர்கிறேன்...
இன்னும் எனக்கு உயிர் இருக்கிறதென்று..
உன் கால்கொலுசு
கான மழையில் நனைந்து நான்
விழிக்கிறேன்.
என் நினைவின் நிசப்தம் கலைந்ததின்று..
இதயச்சுவரும் இதழ் திறந்து
காதல் சொல்லத்துடிக்கிறது
இருந்தும் என்ன?
இதயத்தின் குரல் என்ன
உனக்கு கேட்கவா போகிறது....
நாவிடம் கெஞ்சுகிறது
நாவறந்த என் இதயம்
நரம்பற்ற நாவிற்கு
நீ வரும் நேரம் மட்டும் மௌன விரதம்....
நாதியற்ற இதயத்தின்
நயமான கவியாட்டம்
தொண்டை மேடையில் மட்டும்
தினம் தினம் அரங்கேற்றம்...