காதலி விரும்பும் பொன்

காதலி : பெண்ணிற்கு பொன் ஆசை உண்டு என்றும்

ஆணிற்கு பெண்ணாசை உண்டு என்றும்

கூறுவார் உண்டு

அன்பே உன் காதலி இந்த பெண்

விரும்பும் பொன் என்னவென்று கேட்பாயா

அது வேறொன்றும் இல்லை

உன் பொன்னான மனதில்

நான் மட்டுமே என்றும் எப்போதும்

நிறைந்திருக்க வேண்டும்

என் அன்பே இது தான் இந்த பெண்

உந்தன் காதலி வேண்டும் பொன்




ஆண்: இந்த ஆண், உன் இனிய காதலன் ,

எனக்கும் பெண் ஆசை உண்டு

அந்தப் பெண் நீ தான் நீ அன்றி

இன்னும் ஒரு ஜென்மம் உண்டென்றால்

அப்போதும் நீ தான்

வேறோர் பெண் இல்லை என்பேன்

இது வெறும் வாய்ப் பேச்சல்ல

சத்தியம் சத்தியம் உன் மீது சத்தியம்

அன்பே என் மார்பைக் கிழித்து பார்த்தால்

தெரியும் அங்கு நீ தான் நிலைகொண்டு இருக்கிறாய் என்று.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Sep-16, 5:26 am)
பார்வை : 102

மேலே