கல்கி

அவமானங்களையும்
தோல்விகளையும்
என்னுள் விதைத்து
நிச்சயம் ஒருநாள்
முளைப்பேன்
விருட்சகமாய்...!!!

கஷ்டமும் துரதிஷ்டமும்
என்னைக் கல்லாக்கினாலும்
என்னை நானே செதுக்கி
ஓர் நாள் உயர்ந்து நிற்பேன்
ஊர் மெச்சும் சிலையாய் ...!!!

கருவறையில் தோன்றி
கல்லறையில் முடிவதற்குள்
காட்சிகள் பல மாறினாலும்
கனவை கலைக்காமல்
கடுகளவும் கலங்காமல்
சாதிப்பேன் கச்சிதமாய் ..

ஒவ்வொரு மனிதனின்
வெற்றியும்
தோல்வியும்
அவன் கொண்ட மனதின்
அளவை பொறுத்தது ...

கண்ட துன்பத்தை
தான் உண்டு
கொண்ட இன்பத்தை
பகிர்ந்துண்டு
அடைந்த தோல்வியை
எனது படியாக்கி
கிடைத்த வெற்றியை
பிறர்க்கு ஏணியாக்கி

சமூகத்தின்
இன்னல்களை
வேரறுக்க
வீறுகொண்டு
எழுவேன்
கல்கியாய்...!!

என்றும் ...என்றென்றும்...
ஜீவன்...

எழுதியவர் : ஜீவன் (7-Sep-16, 6:15 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : kalki
பார்வை : 1105

மேலே