எப்படித் துணிந்தாய் பெண்ணே
![](https://eluthu.com/images/loading.gif)
பார்த்திடக் கூட
முதலிலே பயந்தாய்
இன்றெனப் பெண்ணே
இப்படித் துணிந்தாய்
பேசிடும் வார்த்தைகள்
செவிவரை அடையா
இன்றெனப் பெண்ணே
இடியென உரைத்தாய்
குளமெனத் தானே
அமைதியாய் இருப்பாய்
இன்றெனப் பெண்ணே
அலையெனச் சீற்றம்
தேவதை போலே
புன்னகை பூப்பாய்
இன்றெனப் பெண்ணே
இத்தனை மாற்றம்
பெண்ணுனைப் பார்த்து
பிடிக்கலை என்றனர்
நம்காதல் உரைத்து
காதலை வாழ்வித்தாய்
பிடித்தவர் இவரென
என்பெயர் சொன்னாய்
பயந்தவளே நீ
எப்படித் துணிந்தாய்