நிலாவும் காதலியும்
![](https://eluthu.com/images/loading.gif)
நிலவோ தனிமை விரும்பி
நானோ உன்னை விரும்பி
நிலவும் பார்க்கும் திரும்பி
நீ கள்ளச்சிரிப்பு குறும்பி
மேகம் பின்னே மறையும்
நிலவு அளவு குறையும்
உன்னை நினைத்து வரையும்
எல்லாம் விண்மீன் அடையும்
நிலவின் உடையும் வெண்மை
உந்தன் மனமும் வெண்மை
உன்னைப் பார்த்த பின்னே
நான் சொல்லுவதெல்லாம் உண்மை
அழகில் நீயே உச்சம்
நிலவுக்கும் இருக்கோ மச்சம்
புகழ்ந்து சொன்னது சொச்சம்
உன் கோபப்பார்வை அச்சம்