பருகலாம் பகிரலாம்

கவிதை பகிரும் வழிமுறைகள் :
பாரதியோ பாரதிதாசனோ கம்பனோ ஷெல்லியோ கீட்ஸோ அல்லது தற்போதைய
புதுக்கவிதைப் புத்தகங்களையோ உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் .
விடுமுறைநாட்களில் உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஒருமாலையில் தேநீருடன்
கவிதைகளைப் பற்றி உரையாடலாம் .
ஒரு சித்திரையில் அல்லது தையில் உங்கள் ஊரில் கவிதை மேடை அமைத்துக்
கொண்டாடலாம் . ஏழை மாணவர்களுக்கு வள்ளுவன் பாரதி பாரதிதாசன்
கவிதை புத்தகங்களை இலவசமாக வழங்குங்கள் .விழாவை பாரதிதாசனின்
தமிழுக்கு அமுதென்று பேர் என்ற கவிதையுடன் துவங்குங்கள் .
தெரிந்த நண்பரின் நவீன ரெஸ்டாரண்டில் உங்களது கவிதைகளின் குட்டிப் புத்தகத்தை
அழகிய டிசையினர் டப்பாவில் இலவசமாக மேசைகளில் அடுக்கி வையுங்கள் .
தேநீர் பருகப்படும் கவிதைகள் பகிரப்படும் .
குத்து விளக்கேற்றி புத்தகம் வெளியிடலாம் .
புத்தகத் தலைப்பும் முதல் கவிதையும் இப்படி இருக்கலாம் ----
கோபுரம் எவ்வளவு
உயர்ந்திருந்தாலும்
கோபுர நிழல்
தரையில்தான் விழுந்து கிடக்கும் !
-------கவின் சாரலன்
கவிப்பிரிய ரோகிணி கார்த்திக் கேட்டிருந்த கேள்வியில் நான் தந்த பதில்
விரும்பினால் நீங்களும் இவ்வாறு கவிதை பருகலாம் பகிரலாம்