பேசட்டும் உன் மௌனம்
பேசட்டும் உன் மௌனம்
தரையினை தொட்டணைக்கும் உன் பூங்குழலிலே
என் பூவிதயம் நானும் முடிந்திட வேண்டுமடி
தந்திகள் மீட்டிடும் உன் விரல் ஸ்வரங்களுக்கு
என் இதழ் முத்தங்கள் நானும் தந்திட வேண்டுமடி
உன் மைவிழி பார்வையிலே என் உள்ளமதை
நிலவிடம் நானும் தொலைத்தேனடி
தொலைந்த என் காதலை நானும் கண்டேனடி
உன் விழி அம்புகள் என் இதயம் துளைத்து செல்கையிலே
உன் முந்தானை சேலையின் முடிச்சினிலே
என் மூச்சுக்காற்றை நானும் கலந்திட வேண்டுமடி
காலம் முழுதும் என் காதல் தந்தே
உனை என் நெஞ்சினில் சுமந்திட வேண்டுமடி
உயிரோடு என் உடலிங்கே வாழ்வதும்
உயிர் பிரிந்தே என் உடல் மண்ணில் வீழ்வதும்
உன் இதழ் உதிர்த்திடும் வார்த்தையிலே உள்ளதடி
என் தவமதுவும் முடிந்திடவே பேசட்டும் உன் மௌனம்....