இன்னொரு தங்கக் கொடி எங்கடி

ஏண்டி இளவரசி, ஒரு தங்கக் கொடி தான் இருக்குது இன்னொரு தங்கக் கொடி எங்கடி?
@@@@@@@
என்னக்கா சொல்லற? நா எப்பவுமே ஒரு தங்கக் கொடிலதான் தாலியக் கோத்துப் போட்டுடடு இருக்கறென். இன்னக்கி என்ன புதுசா கேக்கற?
@@@@@@
இல்லடி நீ பெத்த தங்கக் கொடில ரண்டு வெளில வெளையாடிட்டு இருக்குது. இன்னொரு தங்கக் கொடி எங்கடி போச்சு?
@@@@@
என்னக்கா நீ பேசறது எனக்கு கொஞ்சங்கூடப் புரில. வெளிப்படையா பேசுக்கா?
@@#@@@@@
சரி நீ மூணு பொண்ணுங்களப் பெத்த. அவுங்க பேருங்களச் சொல்லுடி இளவரசி.
@@@@@@@@
அவுங்க பேரெல்லாம் உனக்குத் தெரியாத மாதிரி புதுசா கேக்கற?
@@@#@
இல்லடி. நீ சொல்லு. சொன்னா ஒன்னும் கொறஞ்சு போயிடமாட்ட.
@@@@@@
சரி சொல்லறங்கா. மூத்தவ ஹேமலதா. ரண்டாவது பொண்ணு சொர்ணலதா. கடசிப் பொண்ணு கனகலதா.
@@@@@@@@
சரி, அந்தப் பேருங்களுக்கு அர்த்தம் தெரியுமா?
@@@@@@
அதெல்லாம் எனக்குத் தெரியாதுக்கா. இந்திப் பேருங்கன்னு மட்டுந்தான் தெரியும். என்னோட கணவர் தான் பேருங்கள வச்சாரு.
@@####
நீயாவது அவுருகிட்ட அந்தப் பேருங்களுக்கு என்ன அர்த்தம்னு கேட்டயா?
@@@@@@
இல்லக்கா. அவுருக்கும் தெரியாதாம்.
@#####
எனக்கும் நேத்துத்தாண்டி தெரிஞ்சுது.
ஹேமா, ஸ்வர்ணா (சொர்ணா), கனகா - இந்த மூணு பேருங்களுக்கும் தங்கம் (தங்கமானவள்/தங்கம் போன்றவள்)ன்னு அர்த்தம். லதா-ன்னா கொடி-ன்னு அர்த்தம். உன்னோட மூணு பொண்ணுங்க பேருக்கும் ஒரே அர்த்தம்.
@@####
நீ சொல்லறது நல்லா புரிதுக்கா. அது தான் இன்னொரு தங்கக் கொடி எங்கனு கேட்டியா?
@@@@
ஆமாண்டி இளவரசி. நீ பெத்த மூணுமே தங்கக்கொடிங்க!

எழுதியவர் : மலர் (8-Sep-16, 12:27 am)
பார்வை : 310

மேலே