சொல்லாத உன் மௌனத்தில்

மின்னும் பொன்னிற்கு ஒளி அழகு
மின்னிடும் மீனுக்கு நீரழகு
கண்ணில் உனக்கு கயல் அழகு
காணும் எனக்கு சொல் அழகு
சொல்லும் சொல்லெல்லாம் உனக்கழகு
சொல்லாத உன் மௌனத்தில்
சொல்லாத அந்தச் சொல் எத்தனை அழகு !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Sep-16, 9:28 am)
பார்வை : 276

மேலே