சகியே நீ

சகியே நீ

முன்னிறு கண்களால்
உயிரை பறிக்கிறாய்

உன்சிறு இதழ்களால்
மறுசுவாசம் தருகிறாய்

ஆடைமீறும் அழகால்
தீயை மூட்டுகிறாய்

இருவளை கரங்களால்
தீயும் அணைக்கிறாய்

சிற்றிடை வளைவுகளில்
சிக்க வைக்கிறாய்

காதலெனும் கணைகளால்
காமம் அழிக்கிறாய்

முதலும் நீ
முடிவும் நீ
சரிபாதி நீ
சகியே நீ

ரா தி ஜெகன்

எழுதியவர் : ரா தி ஜெகன் (8-Sep-16, 8:50 am)
Tanglish : sakiye nee
பார்வை : 222

மேலே