புன்னகைப் படகு
கரையில் ஆடியது படகு
கரை கடந்து செல்ல வந்த புயல்
சற்று நின்று உன்னை
நீரில் தள்ளவா தரையில் தள்ளவா
என்று படகிடம் கேட்டது !
நீரிலும் நிலத்திலும் வாழும் எனக்கு
நீரில் அழிந்தால் என்ன நிலத்தில் அழிந்தால் என்ன
உன் விருப்பம் விருப்பம் போல் செய் என்றது புயலிடம்
படகை புயல் வானில் தூக்கி எறிந்து சென்றது
புயல் சென்ற பின் நீர் அமைதியுற்றது
நீரலையில் மீண்டும் மெல்ல மிதந்தது
போராட்டங்களை நாளும் புன்னகையுடன் சந்திக்கும் படகு !
----கவின் சாரலன்