மனிதனும் நியாயம் கோரி மிருகமும்
மனிதன் மனிதனை கொன்றால்
அது கொலை கொலையாளி
கைதாவான் பெரிதாய்
தண்டிக்கப் படுவான்
தினமும் பல்லாயிரங்களாய்
மனிதன் ஆடு,மாடு, கோழிகளை
வெட்டி அவற்றை உணவாக விற்கிறான்
இது என்ன நியாயம் என்று
அந்த விலங்கினங்கள் ஒரு கால்
பேச தொடங்கி தட்டிக் கேட்டால்
மனிதன் என்ன பதில் சொல்வான்
அப்போதும் இது கொலை அல்ல
என்று வாதிப்பானா ?