முருகன்ஜி

முருகன்ஜி, இங்க வாடாச் செல்லம்.
@@#ஃஃ
தம்பி, இப்ப யார முருகன்ஜி-ன்னு கூப்பிட்டீங்க?
@@@@@@
எம் பையனத்தாங் கூப்பிட்டேனுங்க அய்யா.
@@@@####
'முருகன்' -ங்கறது நம்ம தமிழ்க் கடவுளோட பேரு. அந்தப் பெயர்ச் சொல் தோன்றியவிதம் அதன் பொருள் பற்றி தமழறிஞர் திருவிக அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். சரி அந்தப் பேருகூட எதுக்கு 'ஜி'யை சேர்த்தீங்க.
@@@@@@@@##

அய்யா எங்க வம்சமே முருக பக்தர்களுங்க. அதனாலதான் பையனுக்கு முருகன்-ன்னு பேரு வச்சங்க.. 98% தமிழர்கள் தங்களோட பிள்ளைங்களுக்கு இந்திப் பேரா வைக்கற போது நா ஒரு தூய
தமிழ்ப் பேரா எம் பையனுக்கு வச்சா, எல்லாம் ஒரு மாதிரியாப் பேசுவாங்க. அதுக்குத்தான் எம் பையம் பேருகூட 'ஜி' யை சேத்தனுங்க.
@#%%%
தெலுங்குல ரெட்டி தமிழ்ல ரெட்டியாரா மாறிடுது. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை மதிப்பா பண்ருட்டியார்-ன்னு அவரோட தொண்டர்கள் சொல்லுவாங்க. 'ஜி' ஒரு விகுதி ( பின்னொட்டு, சொல்லின் பின்னே சேர்க்கப்படுவது). அந்த விகுதியை ஒருவருக்கு மதிப்பு அ கவுரம் தரும் வகையில் இந்திக்காரங்களும் இதர வட இந்திய மொழிகளைப் பேசறவங்களும் பயன்படுத்துவாங்க. தம்பி, நீங்க உங்க பையனுக்கு பேரோட மதிப்பும் வேணும்ன்னா அவம் பேர 'முருகர்'- ன்னு மாத்திடுங்க.
@#@#@#@#######@@@@@@@@@@@ சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்று ''வளர்க்க.@@@@@@@@

எழுதியவர் : மலர் (9-Sep-16, 12:03 am)
பார்வை : 146

சிறந்த நகைச்சுவைகள்

மேலே