யார் அழகு ?

அழகே நீ எங்கிருந்து வந்தாய் நீ யாருக்கு சொந்தம்
உன் முகவரி தேடி அலையும் தபால்காரன் நான்
யார் அழகு தேடுகின்றேன்
இறைவன் படைத்த இயற்கையே
நீ அழகா
இறைவன் வரைந்த பெண்னேன்ற ஓவியமே நீ அழகா
நடை பழகும் நதிகளே
நீ அழகா
சத்தம்மிட்டு குதித்து தற்கொலை செய்யும் அருவியே நீ அழகா இல்லை
ஆதவன் வரைந்த வானவில் அழகா இல்லை
இரவை பகலாக்கும் சூரியனே நீ அழகா இல்லை
பகலை இரவாக்கு நிலவே நீ அழகா இல்லை
நீங்கள் தொடமுடியாத நிழலே நீ அழகா இல்லை
ஒவ்வொரு முறையும் கறையேர நினைத்து தோற்றுபோகும் அலையே நீ அழகா இல்லை
அழுகையிலும் சந்தோஶம் கண்டுபிடித்த வானமே
நீ அழகா இல்லை
வான் தொட நினைத்து குதித்து தோற்றுபோகும் மீன்களே நீங்கள் அழகா இல்லை
நகரும் மேகங்கள் அழகா
ஒளிரும் மின்னல் அழகா
ஆடும் மயில் அழகா
பாடும் குயில் அழகா இல்லை
பெண்ணின் வெட்கம் அழகா இல்லை விரல் தேடும் வீணை அழகா ஆதாம் அழகா இல்லை
ஏவால் ஆழகா
யார் அழகு ?
இல்லை விடை தேடி அலையும் வினா அழகா

எழுதியவர் : நாகர் (9-Sep-16, 12:22 pm)
பார்வை : 223

மேலே