இரவு
உண்மைகளை கூறுவதாலோ
உன்னை கண்டதும் உறங்கிப்போகின்றனர்
நித்தம் முத்த யுத்தம் செய்யும்
இளம் தம்பதியின் இறைவன் - நீ தானே
வேடமிட்டு வேடமிட்டு கலைத்துப்போனவன்
உன் மடியில் தானே
உண்மையானவனாய் உறங்கிப்போகின்றான்
நெஞ்சம் கேட்க்கும் நிம்மதியினை
கொஞ்சமாவது கொடுப்பவன் - நீ தானே
இரவு நீ இருப்பதாலே இன்னும்
இயந்திரத்திற்கும் மனிதனிற்க்கும் - வேற்றுமை
இரவு நீ வாழ்க
இம்மானுடம் வாழ
இரவு நீ வாழ்க