தாய் மடி

ஆல மரத்தின் நிழலோ!?,
ஆனந்த ராகம் இசைக்கும்
புல்லாங்குழலோ!?,
சில்லென்று வீசும் காற்றோ !?,
கண்ணுக்கெட்டும் வரை பச்சை
நெர்கதிர்களோ !?,
பேருந்தின் ஜன்னல் ஒரம்மோ!?,
பிறந்த குழந்தையின் பரிசமோ!?, இல்லை,
எவரும் கண்டிறாத சொர்க்கமோ!?,

இவை எதுவும் என்
தாய் மடிக்கு
ஈடாகாது !!!...

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (9-Sep-16, 4:39 pm)
பார்வை : 357

மேலே