இழப்பு

வார்த்தைகளை வடிகட்டினாலும்
கிடைப்பதில்லை ஓர் ஆறுதல் சொல்…

விரல் வருடி துடைத்து விட்டாலும்
கண்ணீர் ஊற்று நிற்ப்பதில்லை…

காலங்கள் கடந்து சென்றாலும்
நிகழ்காலம் நினைத்துக்கொண்டிருக்கிறது…

உயிர் உடலை துறக்கும் வரை
வடுவின் ரணம் மறைவதில்லை…

வலி நிறைந்த வார்த்தை இழப்பு

எழுதியவர் : பாமணன் (10-Sep-16, 12:42 pm)
Tanglish : ezhappu
பார்வை : 120

மேலே