மழலை மொழி
பயின்ற மொழியின் மழலையை
மழலையில் பயின்ற எனக்கும்
மழலை மொழி புதிது
அழுகையின் சப்தத்தை
ஒருமையென்று நினைத்துயிருந்தேன்
அது ஐம்புலன்களின் தேவை மொழி என்ற
பிரணவத்தை அறியும்போது என்வீடு
சுவாமிமலையானது மகனும் குருவானான்
கற்றலின் பயனை அழுகையின் பொருளை உணரும்பொழுது
(திருக்) குறள் உணர்வால் இனித்துக்கொண்டேன்
அழுகை மட்டும்மல்ல அதற்க்கு மேலயும் உண்டு
அனைத்திலும் நான் தேர்வாககும் பொழுது
என் மகன் தேன்தமிழை தித்திருப்பான்