எழுந்து வா நண்பா
எழுந்து வா!
நண்பா எழுந்து வா!
தயங்கி நின்றால்
உன் நிழலும்
தடையாய் தோன்றும்.
துணிந்து நின்றால்
சிறு துரும்பும்
உனக்கு வழிகாட்டும்.
வீழ்ந்து விட்டேன்
என்று வருந்தாதே!
விடாமுயற்சியை நட்பு கொள்.
தடைகளை கண்டு
துவண்டு விடாதே!
தன்னம்பிக்கையை சுவாசம் கொள்.
இலட்சம் முறை
தவறினாலும்
இலட்சியத்தில் தளராதே!
வாய்ப்புகள் வரும் வரை
கொக்காய் காத்திரு !
வரும் போது உனதாக்கிக் கொள்.
தோல்வியை கண்டு
வருத்தம் கொள்ளாதே!
அது வாழ்க்கை தரும் பாடம்.
ஒவ்வொரு முறை
தோற்கும் போதும்
ஒன்றை மட்டும் நினைவு கொள்!
கடந்து வந்த பாதையிலே
நீ கற்றதெல்லாம்
உன் சொத்து!
உதவ யாரும் இல்லையா?
வருத்தம் கொள்ளாதே!
தன் கையே தனக்குதவி.
வீழ்கின்ற தருணத்தில்
உதவுபவரை விட
உன்னை மிதிப்பவரே அதிகம்.
உடைந்து விடாதே!
உனக்குள் இருக்கும்
திறமையை மறந்து விடாதே!
விழிகளில் நீரால்
பயன் ஏதுமில்லை
விரைந்து நீ புறப்படு!
தோற்கும் வரை தான்
இந்த சமூகம் தூற்றும்
வென்றால் உனை கொண்டாடும்.
காலம் அறிந்து செயல்படு
எதிர்காலம்
உனக்கு வசப்படும்.
வெற்றியை கொண்டாட
விரைந்து நீயும்
எழுந்து வா! நண்பா எழுந்து வா!

