மாண்டுவிட்டது மனிதநேயம்

மாண்டு விட்டது மனிதம்
மரித்து விட்டது புனிதம்
ஈக்கள் மொய்த்திடும் உலகம்
அழுகி விட்டது இதயம்

நன்மை என்பதை மறந்து
நாற்றம் கொண்டது மனது
உண்மை பேசிடல் நிறைய‌
ஏற்றம் கொள்ளுமா உலகு

உதவி செய்வது பாவம்
என கற்பித்தலோ லாபம்
பதவி பெற்றிடும் நல்லோர்
பணம் காசுக்காகவே உள்ளார்

நேரில் பார்க்கிணும் கொடுமை
கண்ணை மூடிக்கிடப்பது நன்றோ
தேரில் வந்திடும் சாமி
காப்பாற்றுவோர் யாரோ பூமி

நேசம் மட்டுமே மனிதம்
மனதில் இல்லையே இன்று
பாசம் தின்றிட்டான் மனிதன்
அழித்து நிற்கிறான் கொன்று

பூமிப் பந்தினில் பிறந்தோம்
நல்ல வாழ்வினை வாழ்வோம்
ஏதோ வாழ்ந்திட என்றால்
எதற்கு மனிதராய் ஆனோம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Sep-16, 10:37 am)
பார்வை : 198

மேலே