அந்த முறைக்குமேலே

அந்த முறைக்குமேலே
========================

நீ சல்லியம் செய்திட்டு
முடிக்காமல் விட்ட
என் கவிதையைக் குறித்து
எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பேன்

அன்று நான்
உன்னைக் கண்டிருக்கவில்லைதான்
வழி நெடுகில்
யாரோ சொல்லிச் சென்றதைப்போல
உன்னை ஒருபோதும்
அப்படி பார்த்திருக்கக் கூடாதுதான்
ஒரு சராசரி சாயலோடிருக்கும்
நான் எங்கே
அதீவ சுந்தரியாகிய நீ எங்கே ,,

எதுக்கு கூடுதலா சொல்லணும் ,,,
சாதாரணம்
ஆட்களுக்கு அசுகம் வருகையில்
அவர் கோலங்கெடுவதுவே பதிவு
ஆனால்
உன்னுடைய காரியத்தில் மட்டும்
அது நேரெதிரானது
காய்ச்சல் வரும்போ வியர்ப்புத்துளிகள்
உன் நுதல் அழகு கூட்டும்,,
துடுக்குடைய உன் மூக்கு
காண்பவர்களை காந்தம்போல ஈர்க்கும்
விரைக்கின்ற உன் உதடுகள்
என்னை சஞ்சலசித்தனாக்கும் ,,
பாரிப் பறக்கின்ற உன் தலைமுடி
கொஞ்சம் கோதலாமா என்றுக்கேட்கும் ,,,
அந்த நீண்ட கழுத்து
மூச்சுகணை தெறிக்கலாமா என்று தூண்டும்
சொல்லமுடியாத இன்னும்
இப்படி என்னென்னமோ இருக்கு

அந்த கண்களை மறக்கவும் ஆகவில்லை ,,
அந்த நோட்டம்
அதைத் தள்ளித் தீரவும் முடியவில்லை
எத்தனை சிரமித்தும்
அந்த ரூபம்
எனக்குள்ளிருந்து மாயுவதே இல்லை

மறக்க நினைக்குந்தோறும் ,,
அடக்க பாடுபடுந்தோறும்
உன் விகாரத்தின் சக்தி கூடிகிட்டே இருக்கு
இந்த எழுத்துகளிலாவது
உன்மேல் உள்ள
மரியாதையை
கொஞ்சம் இறக்கிவிடுகிறேனே

நேரில் சொல்லாதவை
அர்த்தமில்லாதவைதான்
விலக்கப்பட்ட
உன் விகாரத்தின் எரிதீயில்
என் இளமை சிறகுகள் கருகுகின்றன

இந்த கதை இங்கே அஸ்தமிக்கவில்லை,,
பலதும் கூறாமல்
விட்டுப்போனவைகளாகவே
தோன்றுகிறது
ஏகாந்ததையிலோடுதான்
உன்னை
வளர்த்துக்கொண்டிருக்கிறேன் எனக்குள்
ஒரு அர்த்தத்தில்
இந்த ஏகாந்ததை
எனக்கு மிகவும் பிடித்திருந்தது

பேருந்து தரிப்பில் நின்றிருந்தபோது
ஜன்னல் வழியே உற்றுநோக்கி
ஒருமுறை
இரண்டாம் முறை
மூன்றாம் முறை என
எல்லா முறையும் சிரித்தாய்
உன் வீட்டைவிட்டுக் கடந்து போகாத உனக்காய்
அந்த பேருந்து தரிப்பில்
காத்திருப்பது
அன்றுமுதல் ஒரு பதிவானது

நாட்கள் கடந்து போயின
முடிவில்
எனக்குள் சந்தேகம் எழுந்தது
எல்லாம் ஒரு
தோன்றலாய் ஆகியிருக்குமோ என்று
இது சரியாகானும்
வழியில்லைப்போல்
என யோஜித்துக் கொண்டிருந்தபோதே ,,
மதியிறங்கி முன்னால் இமைத்தட்டினாய் ,,

இன்னும் நினைக்கிறேன்
இது வெறும் தோன்றலாய்த்தான்
இருக்குமோ என்று

ஒன்றும் பேசவேண்டாம்
எல்லாம் தெரியும்
உன் மனசு எனக்குத் தெரியும்
வேண்டாத எதையும் சிந்திக்கவேண்டாம்
வார்த்தைகளைக் காட்டிலும்
சத்திய சந்ததைகள்
எண்ணங்களுக்கு உண்டு
இப்போது சொல்
என்னை எங்கே
கூட்டிக்கொண்டு போகிறாய் ம்ம்
என்ற குரல்
ஒரு தோன்றலில்லைதான்

கடல் நீலத்தைப்போல
ஆகாய நீலத்தைப்போல
நிலாவினுடைய நீலத்தைப்போல
உன் கண்களினுடைய நீலம்போல
நீலப் புடவையுடனான
உன் வரவு
அதீதம் பிடித்திருந்தது
உனக்கு வேண்டியுள்ள காத்திருப்பு
ஒரு விரதத்தைப்போல
இதற்கிடையில்
வாதாயனம் மறைத்து நின்றால்
எப்படி வருவேன் ம்,
அந்த முறைக்கு மேலே
இத்தனைக்காலமும்
இப்படியேதான்
எப்போதும் என் முன்பு வராத
ஒரு மதுரிக்கும்
நினைவுகளாகிவிட்டாய்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (11-Sep-16, 3:40 pm)
பார்வை : 155

மேலே