காதல் பரிசாய்
அன்றொரு நாள்-
நாம் இருவரும் சந்தித்தோம்
சந்தித்த அன்றே நம்முள் தோன்றிய
இனம் புரியா மாற்றத்தை
கண்களாலே பரிமாற்றிக் கொண்டோம்...
நண்பர்களும் ஆனோம்....
தாய் தந்தை அற்றவன் என்று
நீ கூறிய வார்த்தையை
கேட்க பொறுக்காமல்
தாயாக உன்னை அணைத்தேன்....
போர்முனையில் போராட
கிளம்பிய உனக்கு ஓர்
தந்தையாய் தைரியம் ஊட்டினேன்.....
உன் சுகதுக்கத்தை பகிர்ந்து
தோழியாய் வளைய வந்தவளிடம்
உன் காதலை சொல்லி
என்னை காதலியாய் ஏற்றாய்....
உன் இதயத்தை கொடுத்து
என் இதயத்தை எடுத்துச் சென்றாயே...
அங்கே-
உன்னை போர் முனை வரவேற்றதோ...?
உன் வருகைக்காக காத்திருந்து
வருடங்கள் கடந்து
என் கண்களும் சோர்ந்ததடா....
மனம் துடிக்க வந்தவளுக்கு
காதல் பரிசாய் என்னவனின்
முகம் காண துடித்த என் கண்களில்
நீ உயிர் பிரிந்த செய்தியை காண நேர்ந்ததே.....
எதிரிகள் உன்னை கொல்ல எண்ணி
என் இதயத்தை கொன்றுவிட்டனரே...
என்ன செய்வேன்...
என் உயிர் துடிக்க வைத்த
காலனை எண்ணி நோகவா...
என் விதியை எண்ணி அழுதிடவா...
அல்ல
எதிரியின் தோட்டாவை நெஞ்சத்திலே
ஏந்திய என் காதலனின் வீரத்தை
எண்ணி மனம் தேற்றவா.....
என்னவனே....
உன் வீர மரணத்திற்கு பரிசாய்
என் காதலை சமர்ப்பிக்கின்றேன்.....
என் உயிரையும்......

