உலக வாழ்வு காணும் கனவை போன்றதாகும்

என் அன்பின் சொந்தங்களே ! ஆதிகாலமும் மனித பெருக்கமும் என்ற தலைப்பில் ஒருசில வரிகளை உபதேசங்களாக எழுதியுள்ளேன் எனவே படிப்பதற்கு நேரமிருந்தும் படிப்பதற்கு மறுத்து விடாதீர்கள்.

ஆதிகால மனிதன் அறிவாற்றல் அற்றவனாக வாழ்ந்திருக்கிறான் ஆனால் இயற்க்கையை அதிகமாக விரும்பி அதன் மூலம் தனது அன்றாட வாழ்வாதாரத்தை சற்று அறிவுடன் சீரமைத்திருக்கிறான்.

ஆதிகால மனிதன் பரதேசியாக வாழ்ந்த போதிலும் பல விதமான இயற்கை முறை வைத்தியங்களை இறைவனின் நாட்டப்படி அறிமுகமும் செய்து அதை நவீனயுக மனித செயற்பாடுகளுக்கு வித்திட்டவனாக வாழ்ந்து காட்டியுள்ளான்.

தனித்திருந்த இறைவன் தனக்கான ஆட்சியை உலகில் அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தான் அதை போன்று தனது ஆட்சியை உலகில் நிறுவவும் செய்து அதன் மூலம் உலகை படைத்து அதில் வசிப்பதற்கு மனிதர்களையும் படைத்தான் என்பதே உண்மை

உலகம் ஏன் படைக்கப்பட்டது ? என்ற கேள்விக்கான விடையை தேடுவதை மனிதன் மறந்து போலி இன்பங்களில் தனது வாழ்வை தொலைத்து விடுகிறான் ஆனால் உலகம் ஒரு நாள் அழிந்தேத் தீரும் என்பதற்கு பல அத்தாட்சிக்கள் உள்ளன

உலக வாழ்க்கை காணும் கனவை போன்றதாகும் ஏனெனில் விழிக்கும் பொழுது இவ்விரண்டும் கற்பனையாக மாறிவிடுகின்றது என்பதை மனிதன் ஏற்றுக்கொள்வதில்லை ! எனவே உள்ளங்களையும் அதில் உதிக்கும் எண்ணங்களையும் ஈமானுடன் அமைத்துக்கொள்ள இன்ஷா அல்லாஹ் நாமும் தயாராகுவோம்.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (13-Sep-16, 8:05 pm)
பார்வை : 92

மேலே