என்னவளே

காதல் நோய் தாக்கிய 
எனக்கு.... 
மருந்தாய் நீ வந்திருந்தாய் 
எனில்.... 
என்னுயிர் நீடித்திருக்கும்....! 

காத்திருந்த என் காதலுக்கும் 
புத்துயிர் கிடைத்திருக்கும்...! 

உன் மௌனமும் 
காலதாமதமும் இன்று 
என்னை கல்லறைக்குள் 
உறங்க வைத்துவிட்டது...! 

உன் மடி மீது 
துயில எண்ணிய என்னை 
மண் மீது கிடத்திவிட்டாயே....! 

நான் செய்த பாவமோ...? 
இப்பிறவியில் 
என் காதல் உன்னை சேர்ந்து 
உயிர் வாழாமல் 
கல்லறையில் என் கண்ணீரோடு 
கண்ணீராய் கரைந்துவிட்டதே....! 

எழுதியவர் : நித்யஸ்ரீ (13-Sep-16, 10:14 pm)
Tanglish : ennavale
பார்வை : 374

மேலே