மெல்ல மெல்ல சாகுதடி என் இதயம் 555

என்னவளே...

வானவில் எப்போது தோன்றுமென்று
யாருக்கும் தெரிவதில்லை...

உன்மீது காதல் எப்போது வந்ததென்று
எனக்கு தெரியவில்லையடி...

பலவண்ணம் கொண்ட
வானவில்லை ரசிக்கும் நீ...

உன்னை மட்டும் நேசிக்கும் என்னை
ஏற்க மறுப்பதென்னடி...

வண்ணங்களை சுமந்துவரும்
வானவில் கூட...

மெல்ல மெல்ல
சிறிது நேரத்தில் மறைந்துபோகும்...

உன்னை மட்டும் நேசிக்கும் நான்
மெல்ல மெல்ல சாகிறேனடி...

என்னோடு நீ இருந்தால்...

அந்த வானவில்லையும்
என் கைகளில் ஏந்துவேன் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Sep-16, 11:11 pm)
பார்வை : 735

மேலே