இவதான் பொண்டாட்டியா

"ஒரு அதிகாலைப் பொழுது நான் மனைவியை எழுப்பி கேட்டேன்..
டியர் வாக்கிங் போறேன் நீயும் வர்றியா?

மனைவி கேட்டாள்...
ஓ அப்படின்னா நான் குண்டா இருக்கேன் உடம்பை குறைன்னு சொல்றீங்க அப்படித்தானே.....

நான்: அப்படி இல்லம்மா வாக்கிங் போறது ஹெல்த்துக்கு நல்லதும்மா...

அவள்: அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா??

நான்: இல்லையில்லை.. உனக்கு மூடு இல்லைனா வரவேண்டாம் ஆளைவிடு....

அவள்:- அப்ப என்னை சோம்பேறின்னு சொல்றீங்களா???

நான்:- ஐயோ!! இல்லம்மா... நான் சொல்ற எல்லாத்தையும் ஏன் தப்பாவே புரிஞ்சுக்கிற..?

அவள்:- இவ்வளவு நாள் புரிஞ்சுக்காமத்தான் உங்க கூட குடும்பம் நடத்துறேனா????

நான்:- மறுபடி பாரு... அந்த அர்த்தத்துல நான் சொல்லல்லடி..!

அவள்:- அப்படித்தான் நீங்க சொன்னீங்க .. அப்போ நான் பொய்யா சொல்றேன்???

நான்.:- தயவு செஞ்சு ஆளை விடு..! காலங்காத்தால ஏண்டி சண்டைக்கு வர்ரே..?

மனைவி:- ஆமாங்க நான் சண்டைக்கு வந்தேன். உங்க குடும்பத்துக்கே நான்சண்டைகாரிதான்......!

நான்:-ஐயோ.. போதும் விடு..! நானும் போகல ...போதுமா?

அவள்:- உங்களுக்கு போக அலுப்பு அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க....!

நான்:- சரி நீ தூங்கு!! நான் தனியாவே போய்ட்டு வரேன்.. சந்தோஷமா???

அவள்:- அதானே....உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் என்ஜாய் பண்ணனும்..... அதுக்குத்தானே இவ்வளவும் பேசுனீங்க..! என்னைக்குதான் சந்தோசமா என்னை வெளியே கூட்டிட்டு போயிருக்கீங்க.?

வெறுத்துப் போன நான் எவ்வளவு யோசித்தும் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை...!

உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க பாஸ்.!!

எழுதியவர் : முகநூல் (14-Sep-16, 2:10 am)
பார்வை : 494

சிறந்த நகைச்சுவைகள்

மேலே