என் நெஞ்சில் நின்றாய்
என் நெஞ்சில்
நின்றாய்.....ஏனோ
எவருக்கும்
புரியாமல்
தினமும்
இவனைக்
கொன்றாயே.....??
அடை மழையில்
நான்
நனைகிறேன்.....
இடைவிடாமல்
உன் நினைவுகள்
கொதிக்குதே......!!
காதல்
என்கிற வார்த்தையை
காலமெல்லாம்
சுவாசிக்க
கற்றுத்தந்தவளே.....
காலம்
செய்த கோலமென
கோபம் கொண்டு
ஒதுங்கிப்
போனாயே......!?
சங்கீதம்
பாட
சந்தர்ப்பம்
கிடைக்காத
காட்டு மூங்கிலாய்
வாட்டும்
உன் நினைவுகளோடு
வாழ்ந்து
சாகிறேன்
சகியே......!!
நீருக்குள்
பூத்த
காதல்....
நீறு பூத்த
நெருப்பாய்.....
நிலைமாறிப்
போனதே.....நம்
நினைவுகளும்
திசைமாறிப்
போனதே......!!
எப்படி
முடிந்தது
உன்னால்.....
இப்படி
மறந்து
வாழ......உன்
இதயத்திலும்
கோபத்திலும்
என்றும்
இருப்பேன்.....!!