தினம் ஒரு தத்துவ பாட்டு - 40 = 224

நாம் நேர்மையற்ற சமூகத்தில் நிம்மதியின்றி வாழ்கிறோம்
நமக்கேற்படும் கொடுமைகளால் கோபப்பட்டு கொதிக்கிறோம்
நியாயமில்லா உலகமிதில் வாழ்வதென்பது கசக்கும் பழம்
ஆயக்கலைகள் அறிந்தவனையும் அடிமையாக்கும் காசு பணம்

கட்சித் தலைமை எட்ட வந்தாலே கூழைக் கும்பிடு போடுகிறார்
ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் உளவுத்துறையை ஏவுகிறார்
மீட்சியைப்பற்றி மூச்சுக்கு மூச்சு மூக்குப்பிடிக்கப் பேசுகிறார்
மீட்டிங் முடிந்ததும் சூட்டிங் பறவையாய் கேரவனில் பறக்கிறார்

நன்றாய் பெருக்கும் துடைப்பத்திற்கு எதற்கப்பா விளம்பரம்….?
வருவாய் துறைக்கு வரிகட்டியே ஏமாறுதுப்பா பொதுஜனம்…!
ஒன்றாய் இருக்கும் ஊருக்குளே ஏனப்பா ஜாதி மத கலவரம்…?
அன்பாய் பேசி அரவணைக்க அத்தனை இனமும் விரும்பனும்!

அடிமை வாழ்வை விரும்பும் கூட்டம் இன்றும் நாட்டில் இருக்குது
ஆங்கிலேயன் அடக்குமுறை ஆட்சியை மறைமுகமாய் பின்பற்றுது
கொடுமைகள் நடக்கும் இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்குது
பாழும் அரசியல் நேரம்பார்த்து அப்பாவிகளை அந்நியாயமாய் கொல்லுது


பேராசைப் பிடித்த முதலாளிகளே இலாப கணக்கை காட்டுங்கள்
ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றும் மனப்போக்கை விரட்டுங்கள்
கொடிபிடிக்கும் தொழிலாளிகளே கொள்கையில் உறுதியாய் நில்லுங்கள்
மே தின(ம்) கொண்டாட்டத்தில் உங்கள் உரிமைகளை நிலை நாட்டுங்கள்

இதயமில்லா அரக்கர்கள் சொல்வதுதான் சட்டமா..
பொறுமையில்லா மூடர்கள் போடுவதுதான் திட்டமா
ஏழையாக பிறந்துதான் குடிசைவாசியின் குற்றமா
ஏழைகள் மேல் வீசுவதென்ன கூவம் ஆற்று நாற்றமா

வறுமையை விரும்புகின்ற வேந்தர்கள் யாரடா.
இருந்துவிட்டால் அவர்பெயரை பாருக்கு கூறடா
வறுமையிலும் பெருமையாக வாழ்பவன் தானடா
தற்பெறுமைகள் இல்லாத தாய்நாட்டு வீரன்டா

வாழ வழிக்கேட்டால் சாக வழிசொல்லும் சமூகம்
சமூக சீர்கேட்டால் சிறார் கைகளிலும் மதுபானம்
சிகரெட் பிடிக்காதீர்கள்! மீடியாக்களில் சீரியஸ் விளம்பரம்
சினிமா ஈரோக்களின் விரல்களில் சிகரெட் சொகுசாய் குடுத்தனம்


உண்மை அறிந்த உள்ளங்களே பொய்களை புறந் தள்ளுங்கள்
நன்மை விரும்பும் நண்பர்களே நல்லதை நாளும் சொல்லுங்கள்
அன்பு நிறைந்த உறவுகளே ஆதரவுகரம் சிறிதேனும் நீட்டுங்கள்
இன்று இருப்பது நாளை இல்லை - இதுதான் இயற்கை மாற்றங்கள்.

எழுதியவர் : சாய்மாறன் (15-Sep-16, 5:39 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 175

மேலே