மேக ஊர்வலம்
#மேக_ஊர்வலம்
**********************
மேக ஊர்வலமே எங்கே உனது
கருணைத்துளிகள்..
ஊர்வலம் செல்லும் நீ
ஊர்வளம் அறிவாயோ..
புல்வெளிக்காடெல்லாம் புழுதிபூத்த காடாப்போயிடுச்சு..
புழுதிகாற்றுலயே தேகமெல்லாம்
வறண்டாச்சு..
வயலெல்லாம் களையறுத்து
வருடங்கள் கழிந்திடுச்சு..
இயற்கை மனித இனத்தை
களையறுக்குதையா..
தாய் மண்ணும் ஈரமில்லாது
உருகுதையா..
தங்கம் விளஞ்ச பூமி
அங்கம் வதைக்குதையா..
தாலாட்டும் தாயிடம் தாய்பாலும்
சுரக்க தெம்பில்லையே..
வறண்டமார்பிலே எச்சில்
மெல்லுதுங்க மழலைங்க..
பிள்ளை புன்னகையில் தாய்மனசு
நிறைந்து காலம் போகுதுங்க..
மேகம் கலைக்கும் பருவக்காற்றே
பருவமழைமேகம் அழைத்து
வருவாயோ..
பாவப்பட்டசாதிசனத்துக்கு..
இடியோசை பயந்து தாயை
அணைக்கும் குழந்தைங்க
இதயத்துடிப்போசை அடங்கிப்போயி
கிடக்குதுங்க..
தினம் பாடும் குயிலெங்கே..
மழையாடும் மயிலெங்கே..
ஊரை விட்டுப்போனதோ..
உலகை விட்டுப்போனதோ..
குளத்துக்குள்ளே றெக்கை
முளைத்து பறக்கும் மீனுக்கு..
கடைசிநேரத்துக்கு
சேறும் மிஞ்சலயே..
குளிர் வீசும் தென்றலும்
பேராசையாகி போனதே..
சந்ததிகளை நினைக்கையிலே
சங்கறுந்து நிலைகுலைந்து போகிறதே..
ஏ.எச்.என். நௌசாத்
அட்டாளைச்சேனை