தண்ணீர்
தாகம் காணா உடலும்
தண்ணீர் வேண்டா பயிரும்
எங்கள் ஊரிலில்லை
தாகம் தீர்க்க தண்ணீரில்லை
தண்ணீர் காண பயிருமில்லை
வாடிய பயிரைக் கண்டு
வாடிய உள்ளம் கண்டோம்
வாடும் பயிருடன் இன்று
வாழும் நிலைமைக் கொண்டோம்
கோடிகள் மரங்கள் நட்டார்கள்
பலகேணிகள் குளங்கள்
சுத்தம் செய்தார்கள்
ஏனோ இன்னும்
சுத்தமான நீருமில்லை
பசுமைகள் இல்லை
கோடிகள் கேடிகள்
கணக்காய் இருக்க
அடிமடியில் கைவைக்கும்
அற்ப மூடர்கள்
ஆயிரங்கள் உண்டு
ஆனந்த வாழ்வு அவர்கள் காண
இயற்கை அன்னையை
இன்னலில் தள்ள
மரக்கிளையில் அமர்ந்து
மரத்தையே வெட்டும்
மடமையே
செல்வா